publive-image

அதிமுகவில் நிலவிவரும் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக ஒற்றைத் தலைமை என்ற ஒரே குறிக்கோளோடு பயணித்து வருகிறது. அதுதான் முதல் இலக்கு. தற்போது ஓ.பி.எஸ் முழுமையாக சாதி ரீதியான அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் ஓ.பி.எஸ் பாஜகவில் இணைவதற்கு தயாராகி விட்டார். அவர் முழுமையாக பாஜகவை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார். ஓ.பி.எஸ் நினைப்பது ஒருபோதும் நடக்காது. கழகத்தை அழிப்பதற்கு தற்போது ஓ.பி.எஸ் கையிலெடுத்து இருக்கக்கூடிய இந்த பாஜக என்ற ஆயுதம் ஒருபோதும் அதிமுக தொண்டர்களை வீழ்த்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment