Advertisment

''பிடிச்சு உள்ள போடுங்க சார்... எடப்பாடியை ஜெயிலுக்கு அனுப்பினால்தான் நாடறியும்''-முதல்வருக்கு கோரிக்கை வைத்த புகழேந்தி

Pugalenzhi requested the Chief Minister,

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், ''எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் பொன்விழா ஆண்டை முடித்து அடுத்த வருடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முதல் மீட்பாளராக எம்ஜிஆர் இதனை மீட்டெடுத்தார். அதிமுக கட்சி பிரிந்த நேரத்தில் ஜெயலலிதா இந்த கட்சியை இரண்டாம் மீட்பாளராக மீட்டெடுத்தார். சின்னத்தையும் மீட்டு, பிரிந்த கழகத்தை இணைத்தார். அதேநிலை இப்பொழுது ஓபிஎஸ்க்கும் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் இந்த இயக்கத்தை மூன்றாவதாக மீட்டெடுப்பார். இதுபோன்ற சர்வாதிகாரிகள், கொள்ளைக்காரர்களிடத்தில் விட மாட்டார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Advertisment

தமிழக முதல்வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் தான் கோர்ட்டில் ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் ஆகவே விசாரணையைதுவக்குங்கள். எல்லாவற்றுக்கும் முகாந்திரம் இருக்கிறது.எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கும் பொழுது எதற்காக இதுவரை யாரையும் கைது செய்யாமல் நீங்கள் வெளியில் விட்டுவைத்துள்ளீர்கள். எதனால் இப்படி நடக்கிறது என்று புரியவில்லை. இதைத்தான் மக்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். திமுக காரங்களுக்கு கூட இதில் சந்தோஷம் இல்லை. ஏன் விட்டு வைத்துள்ளார்கள் என்றுதான் கேட்கிறார்கள். இந்த அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதுதான் நான் மதிக்கின்ற, ஓட்டு போடாதவர்களுக்கும் முதல்வர் என்று சொல்லுகின்ற ஸ்டாலின் இடத்தில் அன்போடு நான் கேட்பது. பிடிச்சு உள்ள போடுங்க சார் கொலைகாரனும், கொள்ளைக்காரனும் நாட்டில் வெளியில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மைக்கை பிடிக்கிறார்கள். சாதனை பண்ணியதாகப் பேசுகிறார்கள். அதில் முதல் ஆளாக நிற்பவர் பழனிசாமி. ஆகவே அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பினால் தான் நாடறியும், மக்கள் அறிவார்கள், தொண்டர்கள் உணர்வார்கள். அப்பொழுதுதான் ஓபிஎஸ்-ன் அருமை என்னவென்று நாட்டு மக்களுக்கு புரியும் தெரியும்''என்றார்.

Advertisment

admk PUGALENTHI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe