ராஜ்யசபா தேர்தல்; எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒ.பி.எஸ். மனு!

OPS petition against EPS regarding Rajya Sabha elections!

தமிழகத்தில் ஜூலை மாதம் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கானத் தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் தேதி நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் 3-இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் திமுக ஆதரவுடன் கமலின் மக்கள் ஆதரவு மையமும் போட்டியிடுகிறது. திமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல் போட்டியிடுவார். இதனிடையே இரண்டு இடங்களுக்கு அதிமுக போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் விசயத்தில் பி-பார்ம்மில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை; இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. கடந்த முறை ராஜ்யசபா தேர்தலின் போது நானும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து தான் கையெழுத்திட்டுள்ளோம்.

அந்த வகையில், சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாததால் முந்தைய நிலையே தொடர்கிறது. அதனால், எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கையெழுத்துப் போட அனுமதிக்கக்கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தெரிவிக்க ஓபிஎஸ் தயாராகி வருகிறார். இது குறித்து அவரது தரப்பில் மனு தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் இன்று அல்லது நாளை தேர்தல் அணையத்தை அணுகவிருக்கிறாராம்.

admk O Panneerselvam RajyaSabha
இதையும் படியுங்கள்
Subscribe