Skip to main content

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

OPS – Mother admitted to hospital

 

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் தேனி பெரியகுளத்தில் வசித்து வருகிறார். 90 வயதான பழனியம்மாளுக்கு இன்று மதியம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

தனது தாயாரைக் காண்பதற்காகச் சென்னையிலிருந்து தேனிக்கு விரைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.