அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டிருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேடையிலேயே அறிவித்தார். இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பொதுக்குழுவிலிருந்துபாதிலேயேகிளம்பிசென்றார். மேலும், வரும் ஜூலை 11ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை இ.பி.எஸ். தரப்புமும்முரமாகசெயல்படுத்திவருகிறது. அதேசமயம், இந்தப் பொதுக்குழுவைக் கூட்ட அனுமதிக்கக்கூடாது என ஓ.பி.எஸ். தரப்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில், ஓ.பி.எஸின்ஆதரவாளரானவைத்திலிங்கம்இன்று சென்னையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.