அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமைகுறித்தான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக் கொண்டுவருவது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பி.எஸ் இன்று சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தனது இல்லத்தின் வெளியே இருந்த அதிமுக தொண்டர்களை சந்தித்தார்.
இல்லத்தின் வெளியே காத்திருந்த தொண்டர்கள்! சர்ப்ரைஸ் கொடுத்த ஓ.பி.எஸ்!
Advertisment