O.P.S. - Khushboo as a same airplane

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்புவும் ஒரே விமானத்தில் மதுரைக்குப் பயணப்பட்டனர். ஓ.பி.எஸ்ஸும், குஷ்புவும் என்ன பேசிக் கொண்டனர் என்று அரசியல் வட்டாரங்கள்பரபரத்துக்கிடக்கிறது.

Advertisment

மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.குண்ணத்தூரில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கோயிலை அமைத்திருக்கிறார் அமைச்சர் உதயகுமார். அந்த கோயிலை முதலமைச்சர் எடப்பாடியும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சும் இணைந்து இன்று திறந்து வைத்தனர்.

Advertisment

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (30.01.2021) காலையில் மதுரைக்கு விமானம் மூலம் வந்தார் ஓ.பி.எஸ். அதேபோல, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பாஜகவின் தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா, மதுரைக்கு வந்திருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று காலையில் மதுரைக்கு விமானத்தில் பயணப்பட்டார் நடிகை குஷ்பு.

ஓபிஎஸ் சென்ற அதே விமானத்தில்தான் குஷ்புவும் மதுரைக்குச் சென்றிருக்கிறார். விமானத்தில் ஓபிஎஸ் இருப்பதைப் பார்த்ததும் அவரிடம் நலம் விசாரித்திருக்கிறார் குஷ்பு. இருவரும் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதை தவிர, அரசியல் ரீதியாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

Advertisment