Advertisment

ஓ.பி.எஸ். போடும் கணக்கு! பிரேக் பிடிக்கும் இ.பி.எஸ்.! கடும் கோபத்தில் சசிகலா தரப்பு!

ddd

Advertisment

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா தரப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளுக்கு (டிசம்பர் 5) முன்பாகவே சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டு வரவேண்டும் என்று அவரது தரப்பினர் நினைத்திருந்தனர். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைத்து, தேர்தல் முடியும் வரை சசிகலா வரக்கூடாது என்று டெல்லியிடம் ரகசிய கோரிக்கை வைக்கிறாராம்.

சென்னையில் எடப்பாடி பழனிசாமியோடு அமித்ஷாவைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா விரைவில் ரிலீஸ் ஆகறது நல்லது என்று சொல்ல, இதைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி இறுக்கமாயிட்டாராம். முதல்வர் வேட்பாளராக ஆகிவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போடும் கணக்கை, அவர் தெரிந்து வைத்திருக்கிறாராம். இதனால் சசிகலாவின் விடுதலைக்கு பிரேக் பிடிக்கும் எடப்பாடி மீது சசிகலா தரப்பினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

sasikala ops eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe