ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன. இதில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று இரண்டாக பிரிந்தது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். அவர்கள் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்த போது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

admk

Advertisment

Advertisment

இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் இருந்து கோரிக்கை மனு தாக்கல் செய்தார். எனவே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்றே எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவில் சேர்ந்த உடனே அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் செயல்பட்டது அதிமுக தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதால் எடப்பாடி ஆட்சிக்கும், ஓபிஎஸ் பதவிக்கும் ஆபத்து வருமா என்று கவலையில் அதிமுகவினர் உள்ளனர்.