வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் 14 நாட்களுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் தமிழக அரசுக்காக வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தமிழ அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் வெளிநாட்டு பயணத்தின்போது, தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. மேலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் அதிமுக கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிருப்தி நிலவியது. இந்த விஷயம் எடப்பாடிக்கும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

ops

இதனையடுத்து தனக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரிடம் ரகசியமாக சில பொறுப்புகளை கொடுத்துள்ளதாகவும் அதனை கண்காணிக்க சில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு சிலர் ஓபிஎஸ்ஸிடம் பொறுப்பை கொடுத்து விட்டு செல்லலாம் என்று எடப்பாடி தரப்புக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அறிந்த ஓபிஎஸ் எனக்கு பொறுப்பு முதல்வர் பதவி எல்லாம் தேவை இல்லை என்று தனக்கு நெருங்கிய நிர்வாகிகளிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. அதனால் தற்போது இபிஎஸ் தரப்பு பொறுப்பு கொடுக்க நினைத்தாலும் அதை ஏற்கும் நிலையில் ஓபிஎஸ் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் இப்போ எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருந்துட்டு போறேன். என்கிட்ட யாரும் வந்து இதை பற்றி பேச வேண்டாம் என்று கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது.