Advertisment

ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது - ஓ.பி.எஸ் .கோபம்!

நடக்கவிருக்கும் பாராளுமன்ற தொகுதியில் ஸ்டார் தொகுதியாக கருதப்படுவது தேனி நாடாளுமன்ற தொகுதியாகும் . இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரும் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஈ.வி.கே .எஸ் . இளங்கோவனும் , அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வனும் போட்டியிடுவதால் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது . இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் நிருபர்களால் கேட்கப்பட்டது .

Advertisment

ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதில் உங்க மகன் போட்டியிடும் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது ’ என நிருபர்கள் கேட்டபோது, நாங்கள் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. இன்றைய தொழில்நுட்ப உதவியால் என்ன மாதிரியான படத்தையும் தயாரித்து வெளியிட முடியும்’’ என்றார். பிறகு பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு பற்றி ஒரு ஆபாச வீடியோ வெளியானதில் உங்களுக்கு பங்கிருக்கிறதா?’’ என்று கேட்டபோது டென்ஷனாகி, அது மாதிரியான ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது’’ என்று ஓ.பி.எஸ் கோபத்துடன் கூறினார்.

admk election campaign ops ravindranath
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe