Advertisment

“சிஎஸ்கே நிர்வாகத்துடன் போராடும் ஓபிஎஸ்” - ஜெயக்குமார் 

“OPS fighting CSK management” - Jayakumar

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியதில்சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

Advertisment

இப்போட்டியைக் காண தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். அவருக்கானஇருக்கை கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. ஓபிஎஸ் கிரிக்கெட் பார்க்க வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் மைதானத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

Advertisment

முன்னதாக ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பினைக் குறிப்பிட்டு பூனைக்குட்டி வெளியே வந்தது. சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு எனக் குறிப்பிட்டும் இரண்டாவது புகைப்படத்தில், “ஓபிஎஸ் தற்போது தோனிக்கு பதிலாக தன்னை சென்னை அணிக்கு கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்” என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

jeyakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe