அமைச்சர் வேலுமணி மீது அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்... வெளிவந்த தகவல்!

admk

தமிழக அமைச்சர்கள் அவரவர் மாவட்டங்களிலும் செய்துவரும் கரோனா நிவாரண உதவிகள் பற்றி ஸ்பெஷல் டீம் போட்டுத் தீவிரமாக விசாரித்து வருகிறார் எடப்பாடி. இதனையடுத்து கோட்டை வட்டாரத்தில் ஒரு சில அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் இடையே சுமுகமான போக்கு இல்லை என்று கூறுகின்றனர். இது பற்றி விசாரித்த போது, அமைச்சர் வேலுமணி, தன் துறை தவிர பல்வேறு துறைகளிலும் கூட அவர் மூக்கு நுழைத்து வருவதாகச் சொல்கின்றனர்.

இந்த நிலையில் அவரிடமிருந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையை வேறு ஒரு அமைச்சரிடம் எடப்பாடி மாற்றிக் கொடுக்க முயற்சித்த போது, அதை ஏற்க அமைச்சர் வேலுமணி மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று ஒரு பக்கம் முதல்வர் ஆலோசித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தன் துறையிலும் அமைச்சர் வேலுமணி குறுக்கிடுகிறார் என்று ஓபிஎஸ்ஸும் கடுப்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

admk eps minister ops politics
இதையும் படியுங்கள்
Subscribe