Skip to main content

“பகைன்னு தெரிஞ்சிருந்தா சொல்லி இருக்கவே மாட்டேன்; நெலம என்ன ஆகுறது” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

“OPS EPS did not know that there was animosity between the two” udhaynidhi stalin

 

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே இவ்வளவு பகை இருக்கும் என்பது தெரிந்திருந்தால் நான் அப்படி சொல்லி இருக்கவே மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். 

 

அதில் பேசிய அவர், “அதிமுகவின் முழுவதும் சந்தர்ப்பவாதம்... ஆட்சியில் இருந்த வரைக்கும் பதவிகளைப் பிரித்துக் கொண்டவர்கள், இப்பொழுது அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு முன் சட்டமன்றத்தில் பேசினேன். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தவறுதலாக என் காரில் ஏறப் போய்விட்டனர். இனி அப்படி ஆனாலும் எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன். தயவு செய்து கமலாலயம் மட்டும் போய்விடாதீர்கள் என்று தான் சொன்னேன். 

 

இருவருக்கும் இடையே இவ்வளவு பகை இருக்கிறது என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் சொல்லி இருக்க மாட்டேன். என் காரை எடுத்துச் சென்றிருந்தால், என் காரின் நிலை என்ன என்பதை யோசித்து பாருங்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அதிமுக இருக்கிறது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்