Advertisment

புகழேந்தி தொடர்ந்த வழக்கு! OPS-EPS கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம்!

O.P.S. & E.P.S. Defamation suit on; High Court orders pugazhendhi  to respond ..!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கில் புகழேந்தி பதில்அளிக்கச்சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.இதுசம்பந்தமானஅறிக்கை, தனதுநற்பெயருக்குக்களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிஆகியோரைஅவதூறு சட்டத்தின் கீழ்தண்டிக்ககோரிபுகழேந்தி, சென்னைஎம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.மீதானவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கு விசாரணைக்கு, ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம்,எடப்பாடிபழனிச்சாமிஆகியோருக்குசம்மன்அனுப்பச்சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும்,விசாரணைக்குத்தடை கோரியும், நேரில்ஆஜராவதில் இருந்துவிலக்கு கோரியும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புகழேந்திகட்சியில் இருந்துநீக்கியதாகவும்,அதற்குக்கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர்ஒருவரைகட்சியில் இருந்துநீக்கியவிவரத்தைக்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும்,இதைக்கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுதங்களுக்குச்சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்குதொடர்பாகசிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்எனபன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதிநிர்மல்குமார்முன் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கு பட்டியலிடப்படும்எனதெரிவித்தார். அதேசமயம், விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதி அனுமதியளித்தார்.இதைதொடர்ந்து இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிநிர்மல்குமார்இந்த வழக்கில் புகழேந்தி வரும் 13ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டார்.

ops_eps admk Pugazhendi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe