/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/193_6.jpg)
வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவு தரப்பினர் எட்டாவது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தர்மம் எம்.பி., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஈபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் தம்பிதுரை, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்இல்லத்தின் முன்பாக அவர்களது ஆதரவாளர்கள் குவிந்துவருவதால் இருவரது இல்லமும்பரபரப்பாக காணப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)