நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை வலுப்படுத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இதனால் எடப்பாடி டெல்லி சென்ற போது பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்கு ஓபிஎஸ் அவரின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என்று தடுத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்காக எடப்பாடி தரப்பு தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் வருகையை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விரும்பவில்லை என்ற தகவல் வருகிறது.

admk

Advertisment

Advertisment

இதனைப் பற்றி விசாரித்த போது, தேனி மாவட்டத்தில் தனது குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் நினைப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்தால் அவருக்கு மாநில அளவில் ஏதாவது பதவி கொடுத்து அதை மட்டும் கவனிக்க செய்தால் போதும், தேனி மாவட்ட அரசியலில் தலையீட கூடாது என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறுவதாக சொல்கின்றனர். இதனால் எடப்பாடி முயற்சிக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போடுவது போல் இருப்பதாக கருதுகின்றனர், தங்க தமிழ்ச்செல்வனை இணைத்தால் ஓபிஎஸ் மற்றும் தினகரனுக்கு செக் வைக்க முடியும் என்ற எடப்பாடி கணக்குக்கு ஓபிஎஸ் தடை போட்டதால் கடுப்பில் எடப்பாடி தரப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.