Advertisment

"பணம் வாங்கிவிட்டு வாயே திறக்க மாட்டீங்களே" - ஓபிஎஸ் சர்ச்சை பேச்சு!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ் பேசும் போது, ஜெயலலிதா ஆட்சியின் திட்டங்கள் சென்று கொண்டுதான் இருக்கிறது. எந்த திட்டமும் கைவிடப்படவில்லை. அதோடு, கூடுதலாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

Advertisment

ops

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மகப்பேறு நிதியுதவி 18 ஆயிரம் போன்றதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கினீர்களா? இல்லையா...என்று கேட்டார். அதுக்கு பொதுமக்கள் வாய்திறக்காததால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் பணம் வாங்கிவிட்டு வாயே திறக்க மாட்டீங்களே என்று கூறியதால் பிரசாரத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் பேச்சை பாதியில் முடித்து கொண்டார். ஓபிஎஸ் மக்களை பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கிவிட்டு வாயமட்டும் திறக்கமாட்டீங்களே என ஓபிஎஸ் பேசியதால் பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.

campaign elections Vikravandi byelection ops admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe