ஈரோடு கிழக்கு: அதிமுக சார்பில் நாங்களும் போட்டி என ஓ.பி.எஸ் அறிவிப்பு 

OPS announcement they are contesting behalf AIADMK  Erode East by-election

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி, கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகாபோட்டியிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி. ராமலிங்கத்தை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகசார்பில் ஓ.பி.எஸ் அணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், “இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்களும்போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால்போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

admk byelection Erode ops
இதையும் படியுங்கள்
Subscribe