Skip to main content

கோதாவில் இறங்கிய ஓபிஎஸ்; வேட்பாளரை அறிவித்தார்

 

OPS Announced Candidates for Erode East By-Election

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. 

 

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டு இருந்தது.

 

இந்நிலையில் இன்று அதிமுக இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து தற்போது அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் பாஜக தங்களது வேட்பாளரை நிறுத்தினால் அதிமுக சார்பில் ஆதரவளிப்போம் என்று கூறியுள்ளார். வேட்பாளருக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் கூறினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !