அத்திவரதரை தரிசிக்க வரும்போது பிரதமர் மோடி, சென்னையில் ஒரு பஞ்சாயத்தையும் தீர்த்துவைக்கப் போறாருனு ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது, முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான அதிகார யுத்தம் உச்சத்தை எட்டியிருக்குதாம். டெல்லிக்குப் போன ஓ.பி.எஸ். இது பற்றிய புகாரை பாஜக தலைமையிடம் சொல்லியதாக கூறுகின்றனர். அந்தப் புகார்களுக்கான பதில்களோட எடப்பாடி சார்பில் அமைச்சர் தங்கமணி டெல்லிபோகப் போறாராம். இதுக்கிடையில் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மூவரும் அத்திவரதர் தரிசனத்துக்காக வரும்போது எடப்பாடி-ஓ.பி.எஸ். இடையே இருக்கும் பிரச்னை பத்தி பேசி போறாங்கன்னு ஒரு தகவல் அரசியல் வட்டாரங்களில் எதிரொலித்து கொண்டிருக்கிறது.

admk

Advertisment

Advertisment

இந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்னவென்று பார்த்த போது, சிறையில் இருக்கும் சசிகலா வெளியில் வந்தவுடன் அதிமுகவிற்கு தலைமை ஏற்கும் சூழல் வந்தால், ஓபிஎஸ்ஸின் அரசியலில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க பாஜக தரப்பும், எடப்பாடி தரப்பும் க்ரீன் சிக்னல் காட்டியதகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் தரப்பு சற்று பதற்றத்தில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் வேலூர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முத்தலாக் மசோதா நிலைப்பாட்டில் அதிமுக இரட்டை வேடம் போட்டது கட்சியில் இருக்கும் உட்கட்சி பூசலை உச்ச கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது என்கின்றனர்.