OPS And EPS Absent in Legislature

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக அதிமுக ஒ.பி.எஸ். அணி சார்பில்மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைநீதிபதி குமரேஷ் பாபு விசாரித்து வருகிறார்.

Advertisment

இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில், இன்று இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடவுள்ளது.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி சார்பாக கேள்விகள் எழுப்பியும், கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில், அதிமுக இ.பி.எஸ். மற்றும் ஒ.பி.எஸ். ஆகிய இருவருமே சட்டமன்றத்திற்கு வரவில்லை.

Advertisment