நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தேனி நாடாளுமனற்ற தொகுதியில் அமமுக கட்சி சார்பாக போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின்றன. நேற்று தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் திட்டுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து இன்று தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் அரசியலில் சில முக்கிய முடிவுகள் எடுக்க போவதாக தெரிகிறது.

Advertisment

eps

இந்த நிலையில் தங்க தமிழ்செல்வன் சமீப காலமாக தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்த எடப்பாடி அவரை அதிமுகவில் இணைப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்காக தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சர் தங்கமணி தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது.அப்போது தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவதாக உறுதி கொடுத்ததாக சொல்கின்றனர். இந்த தகவலை அமைச்சர் முதல்வர் எடப்பாடியிடம் கூறியதாக தெரிவிக்கின்றனர். தங்க தமிழ்ச்செல்வனும் எடப்பாடியோடு தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க நேரம் கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இப்போதைக்கு ஓபிஎஸ்க்கும் செக் வைக்கணும், தினகரனுக்கும் செக் வைக்கணும்னா அதுக்கு தங்க தமிழ்ச்செல்வன் தான் சரியான ஆயுதம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால் எடப்பாடி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக எடப்பாடி தரப்பு கூறுகிறது.