OPS before the race ... EPS resumed

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (12.03.2021) காலை 11 மணிக்குத் துவங்க இருக்கிறது. இந்நிலையில், வரும் மார்ச் 15ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே 15ஆம் தேதி மற்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்ற தகவலும்வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிரச்சாரத்தை துவங்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

அதேபோல் இன்று 12 மணிக்கு துணை முதல்வர்ஓபிஎஸ் அவர் போட்டியிடும் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ரேஸில் முதல்வருக்கு முன்னதாகவே வேட்புமனு செய்யவுள்ளார் ஓ.பி.எஸ்.