Advertisment

கேரளாவில் ஓபிஎஸ் 15 நாள் ஆயில் மசாஜ்? - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

OPS 15 Day Oil Massage in Kerala?; Thanga Tamilselvan

தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “வரும் ஞாயிறன்று போடியில் முல்லைப் பெரியாறு - கொட்டக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்படுகிறது. இவ்விழாவிற்கு அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். போடி எம்.எல்.ஏ என்பதன் அடிப்படையில் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வந்தால் நல்லது. வெற்றி பெற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. தேர்தலில் தோற்ற தங்க தமிழ்ச்செல்வன் இரண்டு வருடமாக வந்து கொண்டுதான் உள்ளேன்.

தேர்தலில் தோற்ற எங்களுக்கு முடங்கிய திட்டங்களை அமைச்சரிடம் சொல்லி நிவர்த்தி செய்யவும், குடிநீர் பிரச்சனையைதீர்க்க வேண்டிய ஆர்வமும்உள்ளது. நாங்கள் இந்த ஊரைச் சுற்றிவருகிறோம். வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. கேரளாவில் 15 நாள் ஆயில் மசாஜ் எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது.

நாங்கள் அதிகாரிகளை அழைத்துச் சென்று அந்த அணை குறித்து ஆய்வு செய்து திட்டம் தீட்டினோம். இந்த குடிநீர் திட்டம் நகராட்சி மக்களுக்காகவே குடிநீர் தினமும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe