Skip to main content

ஒ.பி.எஸ். ஆதரவாளருக்கு கட்சிப் பதவி ஒரே நாளில் பறிக்கப்பட்டது ஏன்? கலகலத்துக்கிடக்கும் புதுக்கோட்டை

Published on 07/07/2018 | Edited on 07/07/2018
rajasekar

  

 புதுக்கோட்டை முன்னால் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர். அமைச்சர் விஜயபாஸ்கருடன் கூடிய நட்பால் 2012 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடந்த நகர்மன்ற இடைத்தேர்தலில் ராஜசேகரை வேட்பாளராக்கினார். வேட்பாளராக்கப்பட்ட ராஜசேகர் தனித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக புதிய பார்முலாவை கையாண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். ராஜசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேறு எந்த கட்சி வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுக்க அ.தி.மு.க அடிபொடிகளை வேட்பு மனுவோடு காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையாக காத்திருக்க வைத்து வேறு யாரையும் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் ராஜசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அந்த அளவுக்கு நெருக்கம் காட்டிய அமைச்சரும் – ராஜசேகரும் ஏனோ கடந்த சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர்.


    அதன் விளைவு ஒ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணிகள் பிரிந்த போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமானுடன் ராஜசேகர் ஒ.பி.எஸ். அணிக்கு சென்றார். அதன் பிறகு தலைமைகள் ஒன்று சேர்ந்தாலும் புதுக்கோட்டையில் ஒ.பி.எஸ். அணி ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தது. அதனால் அடிக்கடி மௌன மோதல்கள் நடந்து வந்தது. ஒ.பி.எஸ். அணியில் இருந்தவர்களுக்கு கட்சி பதவி இல்லை.

 

pd


    

இந்த நிலையில அமைச்சர் கலந்து கொள்ளும் விழாக்களை மாஜிக்கள் கார்த்திக் தொண்டைமானும்,  ராஜசேகரும் அவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர். கடந்த வாரம் அறந்தாங்கி ஒன்றியத்தில் ஒரு பள்ளி தாளாளர் திருமண விழாவிற்கு வைகை செல்வனை அழைத்து வந்தனர் ஒ.பி.எஸ். அணியை சேர்ந்தவர்கள். 


    இந்த நிலையில் தான் 5 ந் தேதி ராஜசேகருக்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவியும், கார்த்திக் தொண்டைமானுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியையும் அறிவித்தார்கள். அதற்காக ஒ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்து பதாகை கூட வைத்தார்கள். 


    ஆனால் 6 ந் தேதி ராஜசேகர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஒ.பி.எஸ் – ஈ.பி.எஸ். இணைந்து வெளியிட்ட அறிக்கையால் புதுக்கோட்டை கலகலத்து கிடக்கிறது.
    ஏன் இப்படி கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்ற பாடல் வரிகள் போல ஒரே நாளில் பதவி – அடுத்த நாளே பறிப்பு என்றோம்...


    ராஜசேகர், கார்த்திக் தொண்டைமானுக்கு கட்சி பதவி கொடுத்திருப்பதை அமைச்சர் தரப்பால் எற்க முடியவில்லை. அதனால் மாவட்ட அளவில் பொருப்பில் உள்ள சிலரை பொருப்புகளை பறிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என்று கட்சி தலைமை வரை அவசர ஓலை அனுப்ப வைத்துவிட்டாராம் அமைச்சர். அதன் விளைவு தான் ஒரே நாளில் பதவி பறிப்புக்கு காரணம். 


    ஆனால் ஒ.பி.எஸ். அணிக்கு பதவி கொடுப்பது பொல கொடுத்து பறித்துக் கொண்டதால் அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் டென்சனாகவே உள்ளதால் விரைவில் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றி சுவரொட்டிகள் கூட வெளியாகலாம் என்று ர.ர.க்களே பேசிக் கொள்கிறார்கள்.
            
 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

”100 சதவீதம் நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம்” - விஜயபாஸ்கர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
 We are 100 percent against BJP says Vijayabaskar

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா  தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் எதிரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அதிமுக வேட்பாளர் கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன்,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக ப.கருப்பையா அறிவித்த நாள் முதல் தற்போது வரை ஜெட் வேகத்தில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக ஊரெல்லாம் ஒரே பேச்சு கருப்பையா இரட்டை இலை சின்னத்தில் மகத்தான வெற்றியை பெறுவார் என்ற செய்தி திருச்சி தொகுதி முழுவதும் சென்றடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

எந்தப் பணியிலும் தொய்வில்லாமல் திருச்சியின் குரலாக நாடாளுமன்றத்தில் கருப்பையாவின் குரல் ஓங்கி ஒலிப்பதற்காக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அது எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையும் தருகிறது. நிச்சயம் அவர் நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

திருச்சியினுடைய ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் துடிப்புமிக்க இளைஞனுடைய குரலாக ஒலிக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தத்தில் ஊறிய எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை .மூன்றாண்டு காலம் இவர்களுடைய ஆட்சியில் மக்களிடையே மிகப்பெரிய வெறுப்பும், அதிருப்தியும் இருக்கிறது.

பாஜகவோடு கூட்டணியில் இருந்த போதே நீதிமன்றம் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தனித்தன்மையுடன் கொள்கையோடு இருக்கும். தொடர்ந்து நீங்கள் அதைப் பார்க்கப் போகிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி எதற்கும் துணிந்தவர். 100 சதவீதம் பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். அதை தெளிவாக எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்திவிட்டார். நாங்கள் அமைத்துள்ள கூட்டணியின் மூலம் மகத்தான வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.