Advertisment

“இவங்களுக்குத்தான் வெற்றிவாய்ப்பு” - பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி பேட்டி

Advertisment

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது' என்ற டோனில் தற்பொழுதுதான் பிரச்சாரக் களத்தில் இறங்கி உள்ளது அதிமுக.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பெண் எம்எல்ஏ சரஸ்வதி பேசுகையில், “ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நல்ல வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். பாஜக நிர்வாகிகள்ஆயிரம் பேர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகத்திட்டமிட்டுள்ளோம். நேற்று தான் அதிமுக வேட்பாளரை அறிவித்தார்கள். இனிமேல்தான் பணிமனை போட்டு பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வோம். தனியாகவும் பிரச்சாரம் செய்வோம், அதிமுகவுடன் சேர்ந்தும் பிரச்சாரம் செய்வோம். அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வது தொடர்பாக இன்னும் திட்டமிடப்படவில்லை'' என்றார்.

Erode admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe