Skip to main content

காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி கிணறுகள் சட்டவிரோதம்; உடனடியாக மூட வேண்டும்! அன்புமணி

Published on 03/03/2018 | Edited on 03/03/2018
anbumani

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை  :
’’காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் அனைத்தும் சட்டவிரோதமாக செயல்படுகின்றன என்று ‘காவேரி டெல்டா வாட்ச்’ என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தகவல் உரிமைச் சட்ட பதில்கள் மற்றும் இணைய ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மைகள் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

 ஓ.என்.ஜி.சி ஹைட்ரோகார்பன் கிணறுகள் தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு  வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓ.என்.ஜி.சி  சொல்கிறது. 71 ஓ.என்.ஜி.சி கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன என்று  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு  வாரிய ஆவணங்கள் சொல்கின்றன. 

 

ஆனால், அவை எவற்றுக்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை. அதேநேரத்தில் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓ.என்.ஜி.சி சொல்கிறது. ஆய்வுக்கான கிணறாக இருந்தாலும் சரி, உற்பத்தி செய்யும் கிணறாக இருந்தாலும் சரி, ‘இயங்குவதற்கான ஒப்புதலை(Consent to Operate) ஓ.என்.ஜி.சி காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின்படி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி எந்த கிணற்றுக்கும் இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை.

 

அதாவது, தமிழ் நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் கொடுத்த தகவல்கள்படி டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோகார்பன் கிணறுகளில் ஒன்றுக்கு கூட முறையான சுற்று சூழல் உரிமம் இல்லை என்று அம்பலமாகிறது. இது போன்று உரிமம் இல்லாமல் இயங்கிய கதிராமங்கலம் கிணற்றின் எண்ணெய் கசிவை எதிர்த்து போராடிய மக்களைத்தான் காவல்துறை துன்புறுத்தி சிறையில் அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள கிணறுகள் சட்ட விரோதமானவை எனும் போது, அவற்றை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

 

ஆனால், அவ்வாறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதுடன், சட்டவிரோத கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசும், காவல்துறையும் ஈடுபட்டுள்ளன. இதற்கான சிறந்த உதாரணங்களில் ஒன்று திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் எண்ணெய்க் கிணறுகள் ஆகும். மக்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி துடிப்பதால் தான் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பொதுமக்களையும், ஓ.என்.ஜி.சி அதிகாரிகளையும் அழைத்துப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசோ அந்தக் கடமையை செய்யாமல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஏவல் அமைப்பாக மாறி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை மிரட்டி வருகிறது.  எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

 

தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவக்துறை ஆகிய அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளுக்கு துணைபோகாமல் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் விளை நிலங்களையும்,  விவசாயிகளையும் காப்பாற்றும் நோக்கத்துடன்....

 

1.     சுற்றுச்சூழலையும் வேளாண்மையையும் அழிக்கும் உரிமம் பெறாத ஒ.என்.ஜி.சி கிணறுகள் அனைத்தையும் உடனடியாக மூடவேண்டும்.

 

2.     டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி செயல்பாடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

 

3.     இத்தகைய சட்ட மீறல்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் எப்படி அனுமதித்தது என்பது குறித்து புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

4.     அப்பாவி டெல்டா விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் வாங்கவேண்டும்.

 

இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

கொன்று முட்புதரில் வீசப்பட்ட மனைவி; கணவன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
A wife who was  thrown into a thornbush; Husband's shocking confession

அரியலூரில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் பாலமாடி என்ற பகுதியில் காட்டை ஒட்டிய முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் எழும்பனூரை சேர்ந்த ராணி என்பது தெரிந்தது.

விசாரணை துரிதப்படுத்திய போலீசார் அவருடைய கணவர் மூர்த்தி என்பவரை இது தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கணவர் மூர்த்தியின் செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மொபைல் சிக்னலை வைத்து அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து புதரில் வீசியதாக மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகத்தால் பெண் ஒருவர் கொன்று வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல” - எடப்பாடி பழனிசாமி

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Asking for permission to set up hydrocarbon test wells is not acceptable Edappadi Palaniswami

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

 

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும்‌ பொருட்டு எனது தலைமையிலான கடந்த அதிமுக அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.

 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஒஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.