நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்து இருந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த நிலையில் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் பழனியப்பன் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளை அழைத்து விருந்து கொடுத்து சிறப்பாக கவனித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் திமுக அல்லது அதிமுக கட்சிக்கு சீக்கிரம் மாறிடுவார் என்று தினகரன் தரப்பு நினைத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் தினகரன் பழனியப்பனை அழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பழனியப்பன் தரப்பு விளக்கம் கொடுத்ததாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் தினகரன் தரப்பில் இருந்து பழனியப்பனை கண்காணிக்கும் படி கூறியுள்ளதாக கூறுகின்றனர். தினகரன் கட்சியில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை மாற்று கட்சிக்கு செல்வதால் அடுத்த தேர்தலுக்குள் பெரும்பாலான நிர்வாகிகளை கட்சி கட்டுப்பாட்டுக்குள் வைக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.