Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேர்தலில் அனைவரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் முதியவர்கள் பலர் வாக்களிக்க ஆர்வமுடன் வந்தனர். அப்போது அவர்களை இளம் வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வயதிலும் வாக்களிக்க வந்துள்ளீர்களே... உங்கள் வயது என்ன? எத்தனாவது முறை ஓட்டு போட வந்துள்ளீர்கள்? முதல் முதலில் நீங்கள் ஓட்டு போட்டது நினைவு இருக்கிறதா? என்று ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டதுடன், வாக்குச்சாவடி வந்த அவர்களுக்கு, முதியவர்கள் என்று கூறி அவர்களை காத்திருக்க வைக்காமல் வாக்களிக்கவும் உதவி செய்தனர்.