அரவக்குறிச்சி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ச்சியாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக தொண்டர்கள் ஆர்வத்தில் விசில் அடிக்க ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினார். இதனால் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொண்டர்களை அமைதிக்காக்கும்படி கூறினார்.