Advertisment

திமுக மாவட்ட செயலாளர் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ் -ஈபிஎஸ்!

op

Advertisment

திமுக மாவட்ட செயலாளரின் வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் சென்று மா.செ.வின் துணைவியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமியின் துணைவியார் நேற்று காலை காலமானார். திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று முத்துசாமியின் துணைவியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர், முத்துசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்திற்கு தனது மனைவியின் உடலை கொண்டு வந்தார்.

முத்துசாமி, ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவர். இதனால் அதிமுகவில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் முத்துசாமியின் துணைவியார் இறப்புக்கு அஞ்சலி செலுத்த நெடுங்குளம் கிராமத்திற்கு வந்தனர். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிலையில், இன்று ஏப்ரல் 15ம் ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வமும், அதிமுகவின் மற்ற அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர்தான் முத்துசாமி. எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையம், நெடுங்குளம் கிராமத்தை ஒட்டியே உள்ளது. இந்த பின்னணியில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

District eps OBS Secretary home
இதையும் படியுங்கள்
Subscribe