Skip to main content

ஓபிஎஸ்ஸுடன் அவரது சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

O. Raja meets ops

 

வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா ஓபிஎஸ்ஸின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பானது நடைபெற்றுள்ளது. சசிகலாவைச் சந்தித்ததற்காக ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓபிஎஸ் கண் முன்னே டி.டி.வி. தினகரன் காலில் விழுந்த ஓ. ராஜா

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

O Raja fell at the feet of TTV Dinakaran in front of OPS

 

கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், ''நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லித்தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின், இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

அந்தக் கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் மடியிலே கணம் இல்லாதவர்கள், நெஞ்சிலே ஈரம் உள்ளவர்கள். ஜெயலலிதாவின் மையப் புள்ளியில் இணைந்திருப்பவர்கள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிணைந்துவிட்டோம். இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் உண்மையான தொண்டர் படை. ஆனால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் குண்டர் படை. எங்களுக்கு பொழுது போகவில்லை அதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம் என்று ஒருவர் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், அச்சாணி இல்லாத வண்டி என்று அ.ம.மு.க வை சொல்கிறார். எங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் வீட்டில் இருப்போம். ஆனால், அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்து பாடி சிந்துபாத் வேலையை பார்ப்பார்கள்'' என்றார்.

 

இந்த போராட்டத்தின் தொடக்கத்தில் அங்கு வந்த ஓ. ராஜா, ஓ. பன்னீர்செல்வத்தின் முன்னிலையிலேயே டி.டி.வி தினகரனுக்கு சால்வை அணிவித்ததோடு சடாரென்று எதிர்பாராத விதமாக டி.டி.வி. தினகரனின் காலில் விழுந்தார். 

 

 

Next Story

ரூ.1.50 கோடி சொத்தை அபகரிக்க ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா முயற்சி! - தேனி எஸ்.பி.யிடம் புகார் 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Land fraud case on ops brother o raja

 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள வில்பட்டியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் உள்ள சொத்தை, தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா அபகரித்து விற்பனை செய்ய முயற்சித்து மிரட்டல் விடுவதாக தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்க்ரேவிடம் நில உரிமையாளர் புகார்.  

 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது; ‘என் மனைவி சந்தானலெட்சுமி பெயரில் ஒரு ஏக்கர் 83 சென்ட் தோட்டம் வில்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை எனது மகளின் திருமணத்திற்காக விற்க முடிவு செய்தோம். இதற்காக கடந்த 2010ல் பெரியகுளத்தில் ஓ.பிஎஸ். தம்பி ஓ.ராஜாவின் உறவினர் தென்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் மூலம் தொடர்பு கொண்டார். சொத்தின் அப்போதைய மதிப்புத் தொகை ரூ.40 லட்சம் வழங்குவதாக கூறியதை நம்பி கிருஷ்ணன் பெயரில் 2010 ஆகஸ்ட் 19ல் பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தோம். 

 


அதன்பின் ஓ.ராஜாவும் கிரைய தொகை ரூ.40 லட்சத்தை மூன்று மாதங்களில் தருவதாக கூறினார்; ஆனால் தரவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணன் எங்கள் அனுமதியின்றி பொது அதிகார பத்திர உரிமையை பயன்படுத்தி சொத்தை வேறு ஒரு நபருக்கு விற்க முயற்சித்துள்ளதை தெரிந்து பவர் ஆப் அத்தாரிட்டி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தினோம். 

 


பணத்தை தர மறுத்து ஓ.ராஜா மிரட்டினார். பின் அவருக்கு பயந்து 2011ல் அக்டோபரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தோம். அப்படியிருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2011 நவம்பர் 4ல் தென்கரை விஜயகுமாருக்கு சொத்தை விற்க முயன்றனர். விஜயகுமார் சொத்தின் உரிமையாளர் கையெழுத்தின்றி சொத்தை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில ஓ.ராஜா, கிருஷ்ணன் ஆகியோர் என்னை மிரட்டி கையெழுத்திட நிர்பந்திக்கின்றனர். இதனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யும் விசாரணையை தொடங்கி இருக்கிறார்.