O. Raja fired from AIADMK for meeting Sasikala

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ்-ன் சகோதரர்ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் தனித் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று பெரியகுளத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த நிலையில் கூட்டமானது ரத்து செய்யப்பட்டது.

Advertisment

 O. Raja fired from AIADMK for meeting Sasikala

இந்நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் சந்திப்பதற்காக சசிகலா நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள். பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்'' என்றார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்திருந்த நிலையில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓ.ராஜாவோடு சசிகலாவை சந்திக்க சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி என்ற மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.