Advertisment

ஒற்றைத் தலைமை விவகாரம்; ஓ.பி.எஸ். பண்ணை வீட்டிற்கு வந்த ஓ.ராஜா! 

O. Raja  came to the  O.P.S. farm house!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ்சின் பண்ணை வீட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு தேனி மாவட்ட நகர், பேரூர் மற்றும் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 61 பேரில் 59 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சையதுகான் பேசும்போது, “தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் வருகிற ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது, எவ்வாறு நடந்து கொள்வது என்பதற்காக வழக்கமாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம் தான். இது அவசரக் கூட்டம் அல்ல. தேனி மாவட்ட நிர்வாகிகள் இ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் இருவர் மட்டும் நிர்வாகிகள், மற்ற அனைவரும் கட்சியில் நீக்கப்பட்டவர்கள் என்பதால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை.

Advertisment

நடைபெறவுள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குபிறகு நடைபெற்ற அதிமுக உட்கட்சித் தேர்தலில் தேர்வான நிர்வாகிகள் தேர்வு ஒப்புதல் பெறுவதற்காக தான். இதில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டுவந்தால் அதை தேனி மாவட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேபோல எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்தவர்கள், தற்போது விலகியிருப்பவர்கள் என அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவர்கள் அதிமுகவில் இணையலாம்” என்று கூறினார்.

இந்த நிலையில் திடீரென ஓ.பி.எஸ் சகோதரர் ஒ.ராஜா, பண்ணை வீட்டிற்கு வந்தார். ஆலோனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பிறகு ஓ.ராஜா வீட்டிற்குள் சென்று சில நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும்போது வெளியே வந்தவர், கட்சியினரிடம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பிறகு நிர்வாகிகள் பலர் ஓ.பி.எஸ் வாழ்க, ஓ.பி.எஸ் வாழ்க, என்றும் இ.பி.எஸ் ஒழிக, இ.பி.எஸ் ஒழிக, என்றும் கோஷம் போட்டவாரே சென்றனர்.

admk eps ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe