கடந்த 24ம் தேதி மாலை வாரணாசி சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

o panneerselvam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஆனால் பாஜகவில் அவர் இணைய இருக்கிறார், அதனால்தான் அவர் அங்குசென்று பிரதமரையும், பாஜக தலைவரையும் சந்தித்தார் என தங்கதமிழ்செல்வன் மற்றும் ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

Advertisment

இந்த வாரணாசி பயணத்திற்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஓ.பி.எஸ். மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார். ரவீந்திரநாத் உள்ளிட்டோரை ஆதரித்து பிரதமர் மோடி தேனி வந்து பிரச்சாரம் மேற்கொண்டார், அதற்கு கைமாறுதான் இது என்றும்,

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சசிகலா இரட்டை இலை சின்னம் குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார், அதுகுறித்து பேசதான் அவர் சென்றார் என்றும், ரவீந்திரநாத் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் தேனியில் அவரது செல்வாக்கு குறைந்துவிடும். அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திமுக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் இருப்பதால் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் ரவீந்திரநாத்தின் வெற்றி குறித்து பேச சென்றிருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்களும், அதிமுக நிர்வாகிகளும் கூறிவருகின்றனர்.

பிரச்சாரத்தை தொடர்ந்து அவர் மறுநாள் அனுமன்காட் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனது மறைந்த மூதாதையருக்காக ‘பிண்ட தானம்’ எனும் சடங்கு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.