Advertisment

முதல்வர் பதவி... பாஜகவிற்கு தூதுவிடும் ஓ.பன்னீர்செல்வம்!!!

இரண்டாண்டு காலமாக தனது பதவியை தக்கவைத்துள்ள எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Advertisment

ops modi

இருந்தாலும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு மண்டலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகக் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதி உட்பட கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக பறிகொடுத்துள்ளது.

Advertisment

அதேநேரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் அதிமுக தனது வெற்றியை உறுதிசெய்துள்ளது. எனவே சொந்த சமுதாயத்தினரிடமே எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்துவிட்டார் என்பதையும், தன்னுடைய பகுதியில் தனக்கான செல்வாக்கு வலுவாக இருப்பதாகவும், மக்கள் ஈபிஎஸ் தலைமையைவிட தனது தலைமையையே மக்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டி, பாஜக தலைவர்களுக்கு தூதுவிட்டிருக்கிறாராம் ஓபிஎஸ். இதன்மூலம் முதல்வர் பதவியை கைப்பற்ற அவர் முயற்சித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் அவர் வரணாசிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

chief minister O Panneerselvam Narendra Modi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe