Skip to main content

அ.தி.மு.க., அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அறிக்கை 

 

அ.தி.மு.க., அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது. விஷம பிரசாரங்கள் செய்து, சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம், சிறுபான்மை சமூக மக்கள், விழிப்பாகவும், கவனமாகவும் இருந்து, அமைதி காக்க வேணடும் என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

 

ops-eps


 

இதுதொடர்பாக இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக, பாதக செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும், சில எதிர்க்கட்சிகளும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை, அனைவரும் குறிப்பாக, முஸ்லிம் சகோதர - சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆதரவுதமிழகத்தில், நாளுக்கு நாள், அ.தி.மு.க., அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதை பொறுக்க முடியாமல், பொய் பிரசாரங்களை துாண்டிவிட்டு, முஸ்லிம் சமூக மக்கள் இடையே, குழப்பத்தை ஏற்படுத்த, தி.மு.க., முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அ.தி.மு.க., மதச் சார்பற்ற இயக்கம்; எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, முஸ்லிம்களுக்கு பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறது. 


 

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும், சிறுபான்மை மக்களுக்கு உதவ, இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த, அ.தி.மு.க., அரசு துடிப்புடன் உள்ளது.அசாம் மாநிலம் சம்பந்தப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அது, நாடு முழுவதற்கும் உரியது அல்ல; முஸ்லிம்களுக்கு எதிரானதும் அல்ல என, மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. ஒத்துழைப்புஇந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடக்கும் திட்டங்களுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும், இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அந்த கொள்கை அடிப்படையில் தான், அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது.மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1872ல் இருந்து, நடைமுறையில் உள்ளது. 1௦ ஆண்டுகளுக்கு ஒரு முறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 


 

கடந்த, 2003ல், தி.மு.க., அங்கம் வகித்த, பா.ஜ., ஆட்சியில், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு, குடியுரிமை விதிகள் உருவாக்கப்பட்டன.இந்த விதிகளின் கீழ், 2010ல், தி.மு.க., அங்கம் வகித்த, காங்கிரஸ் ஆட்சியில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், முதல் முறையாக, மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக, தேசிய மக்கள்தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது. ஆறு மாதம்தேசிய மக்கள்தொகை பதிவேட்டில், இந்தியாவில் ஆறு மாதங்களோ, அதற்கு மேலோ வசிக்கிற அனைத்து நபர்களின் விபரங்கள், ஆவணங்கள் எதுவுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின்படி பதிவு செய்யப்படுகின்றன.தாய்மொழி, தந்தை, தாய், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விபரம், ஆதார், மொபைல் போன் எண், ஓட்டுனர் உரிம எண் ஆகிய விபரங்கள், 2020ம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதிஉள்ளது.அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி, குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளி, சமூக நல்லிணக்கம் காப்பாற்ற, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 

தமிழகத்தில், சிறுபான்மை சகோதர - சகோதரிகளுக்கு, எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அ.தி.மு.க., அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது. முஸ்லிம் சமூகத்திற்கு, என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும், அ.தி.மு.க., விளங்கும்.விஷம பிரசாரங்கள் செய்து, சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம், சிறுபான்மை சமூக மக்கள், விழிப்பாகவும், கவனமாகவும் இருந்து, அமைதி காக்க வேணடும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்