Advertisment

வாக்குப்பதிவு செய்த ஓ.பி.எஸ்..!

O Paneerselvam cast his vote

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisment

பொதுமக்களும் காலை முதல் தங்களது வாக்குகளை செலுத்த தீவிரம் காட்டிவருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், திரைத்துறை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை செலுத்திவருகின்றனர். இந்நிலையில், போடி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அவரது தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி மற்றும் இளைய மகன் ஜெயப்ரதிப் ஆகியோரோடு வந்து எஸ்.டி.ஏ. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

Advertisment

tn assembly election 2021 ops
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe