ADVERTISEMENT

இப்போதுதான் புரிகிறது 'குடி'மக்களைக் காக்கவே இப்பணியில் சேர்ந்திருக்கிறோம்... சீமானிடம் வேதனைப்பட்ட காவல்துறை அதிகாரி!

11:37 AM May 09, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் ஆன்லைனில் மது விற்பனைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.


இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் திறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அண்ணா..! குடிமக்களைப் பாதுகாக்கவே நாங்கள் இப்பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பது இப்போதுதான் புரிகிறது. ஆம் அண்ணா..! 'குடி'மக்களைக் காக்கவே சேர்ந்திருக்கிறோம்.” என்று டாஸ்மாக் வாசலிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் வேதனையோடு தெரிவித்தார் என்றார். மேலும், தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வினைப் பாதிக்கும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி, முழு மது விலக்கினை அமல்படுத்த முன்வர வேண்டும்! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT