ADVERTISEMENT

இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? டெல்லி சம்பவம் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி சீமான்!

10:50 AM Feb 26, 2020 | Anonymous (not verified)

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT



இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள சூழலிலும்கூட இந்நாட்டின் குடிகளை மதத்தால் பாகுபடுத்தி அச்சுறுத்துவதும், சொந்த நாட்டு மக்கள் மீது கலவரத்தை அனுமதித்து அமைதி காப்பதும் பன்னாட்டு அரங்கில் இந்நாட்டு ஆட்சியாளர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றும், டெல்லி கலவரத்தில் தர்கா தீ வைத்து எரிக்கப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பி அரவிந்த் குணசேகர் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அவரோடு மேலும் சில பத்திரிக்கையாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிருப்பதாக செய்திகள் வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! ஊடகவியலாளர்கள் மீதும் திட்டமிட்டத் தாக்குதல் சாட்சியங்களின்றி கலவரம் செய்வதற்கான சதிசெயல் என்றும், இசுலாமிய மக்களுக்கு எதிரான இக்கலவரங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, கலவரத்திற்குக் காரணமானவர்கள் எவ்விதப் பாரபட்சமுமின்றி கைதுசெய்யப்பட வேண்டும், இசுலாமிய மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு, அறவழிப்போராட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்றும், திட்டமிட்டு வன்முறைக்களமாக மாற்றப்பட்டு இசுலாமிய மக்களும், மசூதிகளும், தம்பி @arvindgunasekar உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருப்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்..? இந்தியாவில் உச்சபட்ச பாசிசம் தலைவிரித்தாடுகிறது! என்றும் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT