முதலாளிகளுக்கு பொருளாதாரத்தை தாரைவார்த்துவிட்டு, நிதியில் கைவைப்பதா? பாஜக மீது சீமான் ஆவேசம்! 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,421-லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 326 லிருந்து 353 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114-லிருந்து 124 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா நிவாரணத்திற்காகபிரதமர் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதொகையில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ntk

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? என்றும், உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக்கூடாது. இது கரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம், அனைவரும் கற்போம்! என்றும், குவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்! என்றும் கூறியுள்ளார்.

coronavirus modi ntk seeman Speech
இதையும் படியுங்கள்
Subscribe