NTK and DMK warn through posters!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘திமுகதான் சங்கி’ என்று தனது காலணியைக் கழற்றிக் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இரு கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

சமூக வலைதளங்களிலும் இது சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூர் திமுகசார்பில் ஒட்டியுள்ள போஸ்டரில் நாம் தமிழர் கட்சியையும், அதன் ஒருங்கிணைப்பாளரையும் எச்சரிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Advertisment

NTK and DMK warn through posters!

அந்தப் போஸ்டருக்குக் கீழே நாம் தமிழர் கட்சியினரும், ஒரு எச்சரிக்கை போஸ்டரை ஒட்டியுள்ளனர். இப்படி இரு தரப்பினரும், தங்களுடைய கருத்து போஸ்டர் மூலம் யுத்தம் நடத்திவருகின்றனர்.