Notice to Karthi Chidambaram ..! Congress  top decides

நீண்ட வருடங்களாக கிடப்பில் வைக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தார் சோனியா காந்தி. அதனடிப்படையில், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.

Advertisment

இந்த நியமனத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் சோனியாகாந்தி ஒப்புதல் அளித்தநியமனப் பட்டியலைக் கிண்டல் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி சிதம்பரம். குறிப்பாக, ‘இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பலனும் இல்லை; நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது’ என்றிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

Advertisment

அவரது ஆதரவாளர்களோ, “முன்னாள் தலைவர்களின் வாரிசுகள் பலருக்கும் புதிய நியமனத்தில் வாய்ப்புகள் தரப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு மட்டும் இல்லை என்பதை ஜீரணிக்க முடியாததால்தான் அவர் கோபம் காட்டினார்’’ என்கின்றனர்.

இந்நிலையில், சோனியா ஒப்புதல் தந்த பட்டியலை எதிர்மறையாக கார்த்தி விமர்சித்ததைச் சுட்டிக்காட்டி சோனியாவுக்கும் ராகுல்காந்திக்கும் புகார் அனுப்பியுள்ளனர் மாநில நிர்வாகிகள். இதனால், கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு மேலிடத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்கிறது சத்தியமூர்த்திபவன் வட்டாரம்.

Advertisment