/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jayakumar 600.jpg)
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், அமமுகவில் இணையுமாறு தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ''தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது வரவேற்கத்தக்க ஒன்று. அவர் வரட்டும், கட்சித் தொண்டர்கள் வரட்டும், ஏற்கனவே முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். தாராளமாக வரட்டும்.
இது மிகப்பெரிய இயக்கம். கடல் போன்ற அதிமுக இயக்கத்தில் நதிகள் இணைவதில் எங்களுக்கு எந்த மாறுப்பட்ட கருத்தும் இல்லை.
ஆனால் சிலரைத் தவிர... சிலர் என்று சொன்னால் தினகரன், சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் யாரையும் சேர்ப்பதாக இன்றும் இல்லை, நாளையும் இல்லை, எப்போதும் இல்லை...'' இவ்வாறு கூறினார்.
Follow Us