"மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள்" - எஸ்.வி.சேகர் அதிரடி!

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு, தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இரவு தங்குவதற்காக சென்றார். இந்நிலையில் இன்று காலை கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பிளாஸ்டிக் குப்பைகள் கரைக்கு ஒதுங்குவதை பார்த்த மோடி, அரைமணிநேரம் துப்புரவுப் பணி மேற்கொண்டார். அள்ளிய குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் தந்து பொது இடங்களை சுத்தமாகவும் துய்மையாகவும் வைத்துக்கொள்ளும்படி அறிவுருத்தியுள்ளார். அப்போதுதான் நாம் ஆரோக்யமாக இருக்க முடியும் என்றும் அறிவுருத்தியுள்ளார்.

bjp

இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மஹாபலிபுரம் கடற்கரையில் குப்பை அள்ளி தூய்மயாக்கும் நம் பிரதமர்.ஒரு கவுன்சிலர் கூட தன் கவுரவம் குறைந்துவிடும் என செய்ய யோசிக்கும் இச்செயலை உணர்வுபூர்வமாக செய்யும் நம் இந்திய பிரதமரின் கால் தூசி கூட பெறமாட்டார்கள் அவரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.Modi ji true INDIANS ARE PROUD OF U என்று சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டுள்ளார்.

modi politics S.V.sekar Twitt
இதையும் படியுங்கள்
Subscribe