Advertisment

கண்டுகொள்ளாத அதிமுக -  கடுப்பில் தேமுதிக !

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பா.ம.க ,பா.ஜ.க, தே.மு.தி.க , த.மா.கா , பு.த.க , மற்றும் சில அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைத்து இந்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது . இந்த நிலையில் வட சென்னையில் தேமுதிக சார்பாக அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார் .இவரது சொந்த மாவட்டம் சேலம் என்பதால் இந்த தொகுதியை பற்றிய கள நிலவரம் என்ன என்று இன்று வரை இவரால் கணிக்க முடியவில்லை .இதனால் இவர் முழுக்க முழுக்க கூட்டணி கட்சிகளை நம்பியே இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் .

Advertisment

mohanraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வட சென்னையில் தேமுதிகவுக்கு வாக்கு வங்கி மிகவும் குறைவு என்பதால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை எப்படியும் பெற வேண்டும் என்ற முனைப்பில் கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கிறார் . இந்த தொகுதிக்கு உட்பட்ட சட்ட மன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ஜெயக்குமார் அவரது மகன் போட்டியிடும் தென் சென்னை பகுதியை அதிகமாக கவனித்து வருவதால் இந்த தொகுதியை அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்ற பேச்சும் வந்து கொண்டிருக்கிறது . இதனால் தேமுதிக நிர்வாகிகள் கொஞ்சம் கவலையில் உள்ளனர் . அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தீவிரமாக இங்கு பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் .இந்த நிலையில் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடுவது என்று தெரியாமல் தேமுதிக வேட்பாளர் மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியே நீடித்தால் இந்த தொகுதியில் தேமுதிக வெற்றி பெருமா என்ற கேள்வியும் எழுகின்றது.

parliment politics admk vadachennai dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe