Skip to main content

நாகை நகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு ‘நோ’ அதிமுக மட்டுமே போட்டி - ஓ.எஸ்.மணியன்

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

No contest for BJP in Nagai municipal polls - OS Maniyan

"நாகை நகராட்சியின் 36 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே போட்டியிட முடிவு செய்துள்ளோம்; பா.ஜ.க.வோ மற்ற கூட்டணி கட்சிகளோ இதுவரை ஒருவர்கூட சீட் கேட்டு வரவில்லை" என்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

நடக்குமா நடக்காதா என நீண்ட கால இழுபறியில் இருந்த உள்ளாட்சித் தேர்தல் தேதி அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அவசர அவசரமாக வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சிகாரர்களை திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என பரபரக்கிறது. அந்தவகையில் அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

இந்தநிலையில் நாகை மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், சிட்டிங் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

நேர்காணலுக்கு பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.எஸ். மணியன், "நாகை மாவட்டத்திலிருந்து இதுவரை பா.ஜ.க.வினர் சீட்டுக்கேட்டு வரவில்லை. நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டில் கூட போட்டியிடுவதற்கு பா.ஜ.க.வோ, மற்ற கூட்டணி கட்சிகளோ கேட்கவில்லை. சீட்டுக்கேட்டு அ.தி.மு.க.வை நாடவில்லை. ஆகவே 36 வார்டுகளிலும் அ.தி.மு.க.வே நேரடியாக களம் காண இருக்கிறது.

அ.தி.மு.க.வை விமர்சித்துப்பேசிய பாஜகவைச் சேர்ந்த  நயினார் நாகேந்தினர் பேசியது நாகரீகமான அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தை இல்லை. வள்ளுவர் கூறுவார் நாவினால் சுட்டவடு ஆறாது என்று அதுபோல அவர் சுட்டுவிட்டார். அவர் அரசியல் துவங்கியது அ.தி.மு.க.வில்தான், பா.ஜ.க.விலேயே இருந்து பா.ஜ.க.விலேயே வளர்ந்தவர் பேசலாம், அ.தி.மு.க.வில் வளர்ந்து அங்குபோனவர் பேசுவதுதான் வருத்தம் அளிக்கிறது" என்று விமர்சித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.