nlc

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவதுஅனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 16 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisment

இதுசம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில்இதுபோன்று நடைபெறும் விபத்துகளில் உயிரிழப்புகள் தொடர் சம்பவமாக உள்ளது. இதற்கு என்.எல்.சி. நிர்வாகம் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

ஏற்கனவே நடந்த விபத்து, மரணங்கள் தற்போது நடந்துள்ள விபத்து, மரணங்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். நெய்வேலி என்.எல்.சி.-யில் நடைபெறும் தொடர் விபத்துகள் மரணங்கள் சம்பந்தமாகமத்திய அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டாவது அனல்மின் நிலையத்தில் விபத்தில் இறந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்கள் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இவை எல்லாம் வேதனை தரும் சம்பவமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசு விசாரணைக் குழு அமைத்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்