ADVERTISEMENT

"நவீன் பட்நாயக்குடன் அரசியல் பேசும் தேவை இல்லை" - நிதிஷ் குமார்

12:57 PM May 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணியை ஏற்படுத்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிதிஷ் குமார் எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி என பல்வேறு தலைவர்களை தொடர்ந்து சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நிதிஷ்குமார் நேற்று (09.05.2023) ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றார். அப்போது அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நிதிஷ் குமாருக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. நாங்கள் இருவரும் வாஜ்பாய் அரசில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். நிதிஷ் குமாரை இப்போது சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். பூரியில் உள்ள நிலம் பற்றி விவாதித்தோம். பீகார் மக்களும் பக்தர்களும் இங்கு வந்து பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபட ஏதுவாக பீகார் பவன் கட்டுவதற்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் பேசுகையில், "ஒடிசா மாநிலத்திற்கு நான் அடிக்கடி வந்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கால் தான் இங்கு வர முடியவில்லை. இப்போது நாங்கள் இருவரும் அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நவீன் பட்நாயக்குடன் நட்பு வலுவாக உள்ளது. நவீன் பட்நாயக்குடன் அரசியல் பேசும் தேவை இல்லை" எனத் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், "நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி பேசி முடிவு எடுக்க டெல்லியில் நடக்க உள்ள கூட்டத்திற்கு நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்தீர்களா" என நிதிஷ் குமாரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இவர்களின் இந்த சந்திப்பானது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT